/ வாழ்க்கை வரலாறு / உள்ளிக்கோட்டை டூ செங்கோட்டை

₹ 200

அரசியல் களத்தில் அரும்பணியாற்றிய பிரமுகரின் வாழ்க்கை வரலாற்று நுால். அரசியல் உலகில் முக்கிய ஆளுமைகளுடன் நெருங்கி பழகிய போது ஏற்பட்ட அனுபவங்களை சுவாரசியம் குன்றாமல் தருகிறது. எளிய நடையில் வரலாற்று நாவல் போல் படைக்கப்பட்டு இருக்கிறது. விவசாய குடும்பத்தில் சிறிய கிராமத்தில் பிறந்து, எந்த அதிகார பின்புலமும் இன்றி முன்னேறிய பாங்கு படிப்படியாக விவரிக்கப்பட்டுள்ளது.உதவி கேட்போருக்கு சலிப்பின்றி செய்த சேவைகளை அறிய தருகிறது. சென்னை நகரில் குடியேறி, அரசியல் கட்சியில் பொறுப்புகளை படிப்படியாக பெற்று உயர்ந்ததை எடுத்துரைக்கிறது. அரசியல் களத்தில் தலைவர்களுடன் நெருக்கம், சேவை மனப்பான்மையுடனான பணிகளை எடுத்துரைக்கும் வாழ்க்கை வரலாற்று நுால்.– ஒளி


சமீபத்திய செய்தி