/ கதைகள் / உன் கண்ணில் நீர் வழிந்தால்...

₹ 599

வார இதழில் தொடராக வெளிவந்த நெடுங்கதை. கோபுலுவின் படங்களுடன் கதை மாந்தர்களை உலவ விடுகிறது. நட்பு, பாசம், காதல், கோபம், பகை, பொறாமை, வெறுப்பு உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.மருத்துவக் கல்லுாரி மாணவன், பெண்களை உடன்பிறந்தவர்களாக கருதுகிறான். ஆனால், ஒருத்தியிடம் நெருங்கிப் பழகி அன்பைப் பெற ஏங்குகிறான். அவளோ, ‘அண்ணா’ என அழைத்து அதிர்ச்சி கொடுக்கிறாள். சுவையான திருப்பம் இது. காதல் தோற்ற பின்னும், மனதை தேற்றிக் கொள்கிறான். வெறுப்பும், வேதனையும் அடையாமல் வாழ்வை தியாகம் செய்ய முன்வருகிறான். உரையாடல்களில் எங்கும் பொன்மொழிகள் மைல் கற்களாய், வாழ்வின் அனுபவத்தைக் காட்டுகின்றன. ஆனந்தக் கண்ணீரை வரவழைக்கும் அற்புத நெடுங்கதை நுால்.– முனைவர் மா.கி.ரமணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை