/ புத்தக மதிப்புரை / உங்களின் பிரச்சினைகளை நீங்களே தீர்ப்பது எப்படி?

₹ 100

பிரச்னையை சரி செய்து கொள்ள, உளவியல் மற்றும் அனுபவ பார்வையை முன்வைக்கும் நுால். பிரச்னையால் முதலில் வருவது பதற்றம். அதை தீர்த்தாலே, தீர்வை நோக்கிய பார்வை கிடைக்கும் என்கிறது. பிரச்னையை ஏற்றுக்கொண்டு, அதீத உணர்ச்சியின்றி செயல்பட்டால் தீர்வை எட்ட முடியும் என கூறுகிறது. பிரச்னையின் சாதக, பாதகங்களை கணித்து தீர்வை காண வலியுறுத்துகிறது. மூச்சு பயிற்சி, நடை பயிற்சி, பிடித்தமான உணவை சாப்பிடுவது, சமாளிக்க முடியும் என்ற உறுதியடன் இருக்க வேண்டும் என்கிறது. தவறு செய்தால் மன்னிப்பு கேட்டு, குற்ற உணர்வில் இருந்து வெளிவர கூறுகிறது. பிரச்னையில் இருந்து விடுபட உதவும் நுால். – டி.எஸ்.ராயன்