/ அரசியல் / ஐக்கிய நாடுகளின் சபை
ஐக்கிய நாடுகளின் சபை
உலகின் கூட்டமைப்பாக செயல்படும் ஐக்கிய நாடுகள் சபையை அறிமுகம் செய்யும் நுால். உலகம் முழுதும் விடுதலை இயக்கங்களால் எழுச்சி ஏற்பட்டது. பல நாடுகள் அரசியல் ரீதியாக விடுதலை பெற்றன. மக்கள் பொருளாதார ரீதியாக வளம் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, போர்கள் காரணமாக அச்சத்துடன் மக்கள் புலம் பெயர்வதும் கதி கலங்க வைத்து உள்ளது. இது போன்ற பிரச்னைகளை தீர்க்க உருவாக்கப் பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை குறித்து கூறப் பட்டுள்ளது. உலகப்போர்களால் ஏற்பட்ட உயிர், பொருளிழப்புகள் விரிவாக விளக்கப்பட்டு உள்ளன. அமைதியை ஏற்படுத்தி வளர்ச்சிக்கு உதவும் ஐக்கிய நாடுகள் சபை செயல்பாடு குறித்த நுால். – புலவர் சு.மதியழகன்




