/ அறிவியல் / நம் வாழ்வை மாற்ற வல்ல பிரபஞ்ச ஈர்ப்பு விதிகள்
நம் வாழ்வை மாற்ற வல்ல பிரபஞ்ச ஈர்ப்பு விதிகள்
வாழ்க்கையை மாற்றக்கூடிய பிரபஞ்ச ஈர்ப்பு விதிகள் பற்றி கூறும் நுால். பஞ்ச பூதங்களில் தீ வடிவாக இருக்கும் சூரியனிடமிருந்து பெறும் ஆற்றல் அளவிட முடியாதது. தாவரங்கள் ஆற்றலை பெற்று வழங்குவதை குறிப்பிடுகிறது. சித்தர்களின் ஈர்ப்பு விதி, உணவுகள், ஈர்ப்பு ரகசியங்களை அறியும் வழிகளுடன் மன பலம் பற்றியும் கூறுகிறது. பிரபஞ்ச ஈர்ப்பு விதிக்கு விளக்கம் தருகிறது. ஈர்ப்பு விதி சார்ந்த உணவுகளை தருகிறது. பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சை பிராண சக்தியை அதிகம் தருவதை குறிப்பிடுகிறது. பிராண சக்தி உணவுகளால் நோய்களை தவிர்க்கலாம் என்கிறது. மனதின் சக்தி பற்றி விவரிக்கிறது. வெற்றிக்கு உதவும் நுால். – புலவர் ரா.நாராயணன்




