/ கல்வி / தமிழக பல்கலைக்கழகங்கள்
தமிழக பல்கலைக்கழகங்கள்
பல்கலைக் கழகங்கள் பற்றி தகவல் தரும் நுால். பள்ளிப் படிப்பை முடித்து மேல்படிப்பை எங்கு எப்படி தொடங்கலாம் என வழி தேடும் மாணவர்களுக்கு உதவும் கையேடாக உள்ளது. பல்கலைக் கழகத்தில் பல்வேறு துறைகள், வசதிகள், ஆய்வு இருக்கைகள் என அறிய தருகிறது. பொறியியல் கல்லுாரிகளில் பல்வேறு துறைகள் பற்றிய தகவல்களும் தரப்பட்டு உள்ளன. புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் படிப்புகள், தொழில்நுட்ப முன்னேற்றம், வேலை வாய்ப்பை தரும் புதிய துறைகளை தெரிந்து கொள்ளலாம். மருத்துவப் பல்கலைக்கழக படிப்புகள், அரசு, தனியார் கல்லுாரி விபரங்களும் உள்ளன. விவசாயம், மீன்வளம் திறந்த நிலை பல்கலைக்கழகம் என விபரங்களை தரும் நுால். – மா.கி.ர.,




