/ கதைகள் / உண்மை தெரியாமல் வைத்த நட்பு
உண்மை தெரியாமல் வைத்த நட்பு
அகதிகளாக வாழ்வோரை மையமாக வைத்து படைக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். தமிழ் மொழி, பண்பாடு மீதான பிடிப்பை விவரிக்கிறது. பிழைப்புக்காக பல நாடுகளில் வாழ்ந்தாலும், கலாசாரத்தை உதற முடியாமல் தவிப்பதை உணர்ச்சி பூர்வமாக விவரிக்கிறது. கூடவே இருந்து குழி பறிக்கும் குணத்தையும் வெளிப்படுத்துகிறது. சிறுகதை இலக்கணப்படி உருவாக்கப்பட்டுள்ளது. நிற அடையாள வெறுப்பு, புறக்கணிப்பையும் மீறி உழைப்பால் கவனம் பெறும் பெண்ணின் கதை வியப்பு தருகிறது. சுவை குன்றாத நடையில் சொல்லப் பட்டுள்ளது. நிகழ்வுகளை மறக்க முடியாமல் தவிக்கும் கதாபாத்திரங்கள் நிறைந்துள்ளன. புலம் பெயர்ந்த இலங்கை தமிழர் அவதிகளை காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். – சீத்தலைச்சாத்தன்




