/ சிறுவர்கள் பகுதி / உன்னால் முடியும்
உன்னால் முடியும்
அவ்வையார் எழுதிய ஆத்திசூடி அற வரிகளை தலைப்பாகக் கொண்டு சிறுவர்களுக்காக எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 21 கதைகள் உள்ளன. அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை தொகுத்து பல கதைகள் எழுதப்பட்டுள்ளன. கதையின் நீதி, ஆத்திசூடி அற வரிகளுக்கு உட்பட்டதாக உள்ளது.நுாலின் மற்றொரு பகுதி, சுவாரசியமான பொன்மொழிகளால் அமைந்துள்ளது. அறிஞர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள், அவர்கள் உதிர்த்த பொன்மொழிகள், சிறுகதை போல் எளிமையாக வடிக்கப்பட்டுள்ளன. பொது அறிவை வளர்க்க உதவும். சுவாரசிய வாசிப்புக்கு உகந்த நுால்.– ஒளி