/ கட்டுரைகள் / உறக்கத்தை உலுக்கிய 100 கனவுகள்!
உறக்கத்தை உலுக்கிய 100 கனவுகள்!
கனவுகள், மனதின் ரகசிய மொழியாக உள்ளதாக தெரிவிக்கும் நுால். நேரடி யாக அர்த்தத்தை தெரிவிக்காமல் ஆழ்மன உண்மைகளை அடையாளப்படுத்துவதாக குறிப்பிடுகிறது. சிறுவயது கனவுகளின் முக்கியத்துவத்தில் இருந்து குறட்டைக்கும், கனவுக்கும் இடையேயான உறவு வரை ஆராய்கிறது. கனவுகளில் பொதிந்துள்ள குறியீட்டை திறமையாக டிகோட் செய்ய முனைந்துள்ளது. கனவுகள் மற்றும் சாதாரண காட்சிகள் ஆழமான அர்த்தங்களை கொண்டுள்ளன என அங்கீகரித்துள்ளது. கனவுகள் பற்றி விவரிக்கிறது. கனா என்னும் கருத்தோடு கனவுப் புதையல்களை 100 தலைப்புகளில் தந்துள்ளது. ஆழ்மனதின் புதிரான பகுதிக்குள் நுழைந்து ஆராய்ந்து தகவல்களை தெரிவிக்கிறது. – வி.விஷ்வா