/ சுய முன்னேற்றம் / உருக்கு உலக மன்னர் லட்சுமி மிட்டல்
உருக்கு உலக மன்னர் லட்சுமி மிட்டல்
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை -17. (பக்கம்: 232) இந்தியாவின் உருக்குத் தொழிலில் முதலிடத்தை, கடின உழைப்பாலும், திறமையாலும் அடைந்த லட்சுமி மிட்டல் குழுமம், நமது பாராட்டுக்குரியவர்கள். "இந்தியா ஏழை நாடு என்ற ஏளனம், இந்த இருபத்தைந்து ஆண்டுகளில், லட்சுமி மிட்டல், ரத்தன் டாடா, நாராயண் மூர்த்தி போன்ற தொழில் வல்லுனர்களால் காணாமல் போய்விட்டது. லட்சுமி மிட்டலின் நிறுவனம் உலகின் மிகப் பெரிய உருக்கு இரும்பு உற்பத்தியாளராக மாற, அனைத்து விதத்திலும் தயாராக உள்ளது என்ற அளவுக்கு, இந்தோனேஷியா மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளில், சொந்த உருக்கு இரும்பு நிறுவனங்களை வைத்திருக்கும், அந்த மாமனிதரின் எழுச்சி ஊட்டும் வரலாறு!