/ கட்டுரைகள் / உயிரே உயிரே
உயிரே உயிரே
பக்கம்: 168 காதலுக்குக் கண்கள் இல்லை; ஆனால், கனவுகள் நிச்சயம் உண்டு. கற்பனையிலும், காவியத்திலும், கதை, சினிமாவிலும் கானல் நீராய் கண்ட காதலுக்கு, இந்த நூல் உண்மைக் கண்ணீரால் விடை சொல்கிறது.வரலாற்று நாயகர்களின் வாழ்வில் நடந்த காதலை, வர்ணனையே இல்லாமல் சம்பவமாக மாலன் சுவைபட எழுதியுள்ளார்.ஜின்னா அழுதது இரு முறை தான். ஒன்று இஸ்லாமியர் அல்லாத பார்சி இன பெண், "ருட்டி இறந்தபோது, மற்றொன்று பாகிஸ்தானில் குடியேற இந்தியாவை விட்டு வெளியேறியபோது, நேருவிற்கும், கமலாவிற்கும் திருமணம் முடிந்தும், ஆனந்த பவனத்தில் ஆரண்ய வாசமாக இருவரும் இருந்தனர்.ஹிட்லர் ஜெலியின் முரட்டுக் காதல், இசை அரசர் பீத்தோவன் ஜோசப் சங்கீதக் காதல், காதல் தடயங்கள் ஆகியவை வாசகரை வசீகரப்படுத்துகின்றன.




