/ கட்டுரைகள் / வாடைக்காற்றும் வழி தவறிய மேகங்களும்!
வாடைக்காற்றும் வழி தவறிய மேகங்களும்!
இரண்டு கட்டுரைகளும், ஒரு நாவலும் அடங்கிய தொகுப்பு நுால். சமுதாய பிரச்னைகளை சிந்தித்து புதிய கோணத்தில் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் இடம் பெற்றுள்ள நாவல் உருவான விதம் சுவாரசியம் தருகிறது. தென்றல் இதழ் நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்ற கதையின் பிரதி தொலைந்ததால், சிதைந்த மூலப் பிரதியில் இருந்து மறு உருவாக்கம் செய்து எழுதப்பட்டுள்ளது. கதையின் போக்கை மனதில் நிறுத்தி, மீட்டுருவாக்கம் செய்து எழுதிய விதத்தை மிக சுவாரசியமாக பதிவு செய்துள்ளார்.நாவல் தவிர, அதிகாரத்தை மையப்படுத்தி வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்ட இரண்டு கட்டுரைகளும் இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.– அமுதன்