/ வரலாறு / வையகம் போற்றும் வள்ளல் பேகன்

₹ 150

கடையேழு வள்ளல்களில் ஒருவராகிய பேகனை பற்றிய இலக்கிய நாடக நுால். பழனி மலைப்பகுதியை, ஆவியர் குடி என குறிப்பிடப்பட்டுள்ளது. மழை பொழியும் மலைச்சாரலில் கருமேகங்களைக் கண்டு ஆடிய மயில், குளிரில் நடுங்குவதாக எண்ணி போர்வையை போர்த்தி விட்டவன். இதனால், மயிலுக்குப் போர்வை தந்த வள்ளல் என அழைக்கப்பட்டான். உணர்வு, அறிவை வெல்கிறது. இதையே கொடை மடம் என்று குறிப்பிடுகிறது. தமிழர் ஆட்சி, கொடை, பண்பாடு, பரந்த மனப்பான்மை, சமூக நெறி எப்படி இருந்தது என்பதை எடுத்துக்காட்டுகிறது.வரலாற்று செய்திகளை வெளிப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்திருக்கின்றன. அவை திறம்பட அமைக்க பெற்றிருப்பது தனிச்சிறப்பை தருகிறது. படிக்க உகந்த நாடக நுால்.– வி.விஷ்வா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை