/ கட்டுரைகள் / வையை ஆண்டு மலர் 2023
வையை ஆண்டு மலர் 2023
இயற்கை வேளாண்மை செயல்பாடுகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். விவசாயிகளின் ஆண்டு மலராக மலர்ந்துள்ளது. இயற்கை விவசாய நுட்பங்களை விளக்கமாக தந்துள்ளனர் அறிஞர்கள். புஞ்சை தாவரங்கள் குறித்து பாயமன் கட்டுரை, புதிய வாழ்வுக்கு வழி காட்டும். விதை பரப்புதலில் நடந்து வரும் முயற்சிகள் குறித்த விபரங்கள் சிறப்பாக உள்ளன.உயிர் சூழல் பன்மைத்துவம், தமிழர் பாரம்பரிய அறிவியல், விவசாய காப்பீடுகள், நஞ்சில்லா உணவு உற்பத்தி என கருத்துக்கள் அமைந்துள்ளன. பயிர் சாகுபடி கள அனுபவங்களை விவசாயிகள் வடித்துள்ளனர். தமிழகத்தில் நடந்து வரும் இயற்கை விவசாயத்தின் சாரமாக செய்திகளை கொண்டுள்ளது. தமிழகத்தின் விவசாய சூழலை எடுத்துரைக்கும் நுால்.– மதி