/ கட்டுரைகள் / வையை தடம் தேடி

₹ 120

வைகையின் தடம் தேடி புறப்பட்டு, அத்தனை தகவல்களையும் திரட்டி ஆவணப்படுத்தி உள்ளனர், அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் திருமலை, சிவக்குமார். வைகையை தெய்வமாக மதித்து, அதற்கு படையல் செய்தனர் அன்றைய மதுரை மக்கள். நற்றிணையும், குறுந்தொகையும், ஐங்குறுநூறும் கொண்டாடிய வைகை, இன்று நாறுதே என்ற பெருங்கவலையுடன் நூலாசிரியர்கள் எழுதியிருக்கின்றனர். சிங்கள கதையிலும் வைகை பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறும் ஆசிரியர்கள், இன்று வேதிக்கழிவால் வைகை படும் வேதனையையும் விவரிக்கின்றனர்.வைகையின் தொல்லியல் குறிப்பு, விழாக்கள், கரையோரச் சடங்குகள், பாசன திட்டங்கள், துணைநதிகள், நீர்நிலைகள் என, முழுமையான தகவல்கள் புத்தகம் முழுக்க நிரம்பி கிடக்கின்றன. முத்தாய்ப்பாய் வனமேலாண்மை சட்டங்களை விளக்கவும் ஒரு அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ளது.வைகை நதி பற்றிய இந்த புத்தகம் ஓர் ஆவணம். வைகையை அறிய நமக்கு இது ஒரு அரிய பொக்கிஷம். மதுரை மக்கள் தவிர மற்றவர்களும் படிக்க வேண்டும். -ஜிவிஆர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை