/ ஆன்மிகம் / வள்ளல் இராமலிங்கர் அருளிய அருட்பா அமுதம்
வள்ளல் இராமலிங்கர் அருளிய அருட்பா அமுதம்
வள்ளலாரின் சன்மார்க்க நெறி உணர்த்தும் பாடல்களைத் தேர்ந்தெடுத்து விளக்கங்கள் தந்திருக்கும் நுால். மனதைத் துாய்மையாக்க வள்ளலார் முன்வைக்கும் ஆன்மநேய ஒருமைப்பாட்டை விளக்கி, அருட்பெருஞ்ஜோதியின் ஆற்றலை எடுத்து உரைக்கிறது. மனித பிறவியின் நோக்கம், இறையுணர்வில் நிறைவு விளக்கப்பட்டுள்ளன. பஞ்சமாபாதகத்துக்கு பொருள் தரப்பட்டுள்ளது. பிரார்த்தனையின் சிறப்பு, தியானத்தின் பலன், திருவடி மகிமை, சன்மார்க்க நெறியை எளிய நடையில் விவரிக்கும் துாய ஆன்மிக நுால்.– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு