/ கட்டுரைகள் / வள்ளலாரும் திரு.வி.க.வும்
வள்ளலாரும் திரு.வி.க.வும்
வள்ளலார், திரு.வி.க., ஒற்றுமையை விளக்கும் நுால்.வள்ளலாரின் மரணமிலா பெருவாழ்வு என்ற புத்தகத்தில் உள்ள கருத்து, சுருக்கிய வடிவில் தரப்பட்டுள்ளது. குருவே ஆட்கொள்வார் என்பதை வள்ளலார் வாழ்வு நிகழ்வுடன் எடுத்து கூறி குருநிலையில் கண்டு இன்புற வைக்கிறது.பேதங்களை போக்க வள்ளலார் சமரச சன்மார்க்கம் கண்டது, போரில்லா உலகம் உருவாக எண்ணி வாழ்ந்ததை குறிப்பிடுகிறது. அதே வழியை திரு.வி.க., பின்பற்றியதையும் எடுத்துரைக்கிறது. மண வாழ்வை விரைவில் துறந்ததையும் கூறுகிறது. மக்கள் அமைதியாக வாழ விரும்பியதை எடுத்துக்காட்டுகிறது. பொருள் தேடி அலையும் மக்களை அருள் தேட வழிநடத்தும் நுால்.– முகிலை ராசபாண்டியன்