/ தமிழ்மொழி / வள்ளுவ கீதை

₹ 180

குறளை வாழ்வியல் நெறியுடன் இணைத்து கூறும் நுால். மொத்தம் 200 குறள்கள் எளிதில் புரியும் வகையில் விளக்கப்பட்டுள்ளன. வாழ்வில் வெற்றி பெற எண்ணுவோர், முதலில் சோம்பலை விட்டொழிக்க வேண்டும் என்கிறது. வீடு தேடி வந்தோரை வரவேற்க மனமில்லாதது தான், மிகக்கொடிய வறுமை என எடுத்துரைக்கிறது. பிறருக்கு தீமை ஏற்படுத்தாத சொல்லை கூறுவது தான், வாய்மை என்கிறது. ஆராயாமல் சேரும் நட்பு, ஒரு கட்டத்தில் கேடு விளைவிக்கும் என எச்சரிக்கிறது. புண்படாத வகையில் பேச அறிவுரைக்கிறது. பணத்தை விட குணம் தான் முக்கியமானது என இடித்து கூறுகிறது. இல்லற வாழ்க்கை, சிக்கனம், மன துாய்மை, திட்டமிடல், கெட்ட ஆசையை விட்டொழிப்பது போன்ற பல்வேறு குணங்கள் பற்றி அறிவுரைக்கும் நுால். – டி.எஸ்.ராயன்