/ வாழ்க்கை வரலாறு / வள்ளுவர் வழியில் நரேந்திரமோடி
வள்ளுவர் வழியில் நரேந்திரமோடி
பிரதமர் மோடியின் ஆட்சித்திறனை, 73 திருக்குறளுடன் ஒப்பிட்டு படைக்கப்பட்டுள்ள நுால். ஒருவரின் உழைப்பு தான் உயர்வைத் தீர்மானிக்கும் ஒழுக்கமே மேன்மையை தந்து உயர்த்தும் என்ற கருத்து ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் திட்டமிடல், செயல் திறன், தெளிந்த சிந்தனை மூலமாக அடைந்த உயரத்தை விளக்குகிறது. நடுநிலை தவறாதவர், சொல் தவறாதவர், அரவணைத்து ஆட்சி செய்யும் மோடி, தன்னலமில்லாத் தலைவர், சொற்களின் வலிமை அறிந்து பயன்படுத்தும் வல்லவர், வாரிசு அரசியல் கூடாது, தோல்வி இல்லை, தொடுவானம் தான் எல்லை என்ற எண்ணத்தோடு செயல்படுவதாக குறிப்பிடுகிறது. நிர்வாகத் திறமையே தொடர் வெற்றிக்குக் காரணம் என பதிவுச் செய்கிறது. தேர்தல் பிரசாரம் செய்ய பாரதிய ஜனதா தொண்டர்களுக்கு பயனளிக்கும் நுால். – முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்