/ வாழ்க்கை வரலாறு / வா.மு.சேதுராமன் அவர்களின் தமிழ்த் தொண்டு

₹ 160

வா.மு.சேதுராமன் ஆற்றிய தமிழ்த்தொண்டு பற்றி விரிவாக விளக்கும் நுால். இதழ் ஆசிரியர், பள்ளி ஆசிரியர், கவிஞர், நற்றமிழ் பணிக்காக நாடெங்கிலும் நடைபயணம் மேற்கொண்டவர் என்று பன்முகத் திறமைக்குச் சொந்தக்காரர். அயல் நாடுகளிலும் சென்று தமிழ்ப் பண்பாடு, கலாசாரத்தை, தமிழ் மொழியின் சிறப்பை விளக்கியவர் என்று குறிப்பிடுகிறது.பின் இணைப்பாக, கவிஞர் வா.மு.சே.,வின் வாழ்க்கை வரலாற்றை விளக்குகிறது. எழுதிய நுால்கள் தமிழ், ஆங்கிலத்தில், 99க்கு மேற்பட்டவை என்ற பட்டியலைத் தருகிறது. ஆய்வு நுாலை எப்படி உருவாக்க வேண்டும் என வழிகாட்டியாய் அமைகிறது. சுயசரிதை எழுத முயல்வோருக்கு பயன் தரும்.– புலவர் ரா.நாராயணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை