/ கட்டுரைகள் / வணக்கத்திற்குரிய வாஜ்பாய்
வணக்கத்திற்குரிய வாஜ்பாய்
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் வாழ்க்கை குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். இளமைக்காலம் துவங்கி, அவரது வளர்ச்சி, அப்போதைய பிரதமர் நேருவிடம் தொடர்பு, இந்திரா காந்தியுடன் மோதல், பாரதிய ஜனதா கட்சி துவக்கம் என விலாவரியாக சொல்லப்பட்டிருக்கிறது. அத்வானியுடன் நெருக்கம், பாபர் மசூதி இடிப்பு குறித்து தக்க மேற்கோள்களுடன் நேரடி வர்ணனை போல் சொல்லப்பட்டுள்ளது. அரசியல் நகர்வுகள் டைரி குறிப்புகள் போல் விரிகின்றன. சம்பவங்கள் எவ்வித மேல்பூச்சு இன்றி சொல்லப்பட்டிருக்கின்றன. வாழ்வின் இறுதிக்காலம் குறித்த பதிவு உயிரோட்டமாக இருக்கிறது. கொள்கை ரீதியாக மாற்று சிந்தனை கொண்டிருந்த அரசியல்வாதிகளுடன் உறவு பற்றியும் தகவல்களை தருகின்ற நுால். – ஊஞ்சல் பிரபு




