/ வரலாறு / வந்தே மாதரம் வரலாறு
வந்தே மாதரம் வரலாறு
வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை யொட்டி வெளியிடப்பட்டுள்ள நுால். பக்கீம் சந்திர சாட்டர்ஜி புனைந்த, ‘வந்தே மாதரம்’ பாடலின் வரலாற்று பின்னணியை எடுத்து கூறுகிறது. மிக எளிய நடையில் தகவல்களை தருகிறது. பாசறை கீதம், பாரதியாரின் தொண்டு, வந்தே மாதரம் பிள்ளை, சட்டமன்றத்தில் வந்தே மாதரம், எதிர்ப்பும் போட்டியும், அரசியல் நிர்ணய மன்றத்தில் முடிவு ஆகிய தலைப்புகளில் செய்திகளை தொகுத்து தருகிறது. வந்தே மாதரம் பாடல் எழுதப்பட்ட போது, இந்திய சமூகத்தில் நிலவிய பல்வேறு சூழல்களிலும் எழுந்த எதிர்ப்புகளை எல்லாம் எப்படி தகர்த்து, தேச பக்தியில் முக்கியத்துவம் பெற்றதை தெளிவாக சுட்டிக் காட்டுகிறது. ஒரு பாடலின் தேச பக்தி வரலாற்றை எடுத்தியம்பும் நுால். – மதி




