/ கட்டுரைகள் / வரலாற்றுப் பார்வையில் இந்தியச் செய்தியாளர் சங்கங்கள்

₹ 190

பத்திரிகையாளர்களுக்கு அமைந்த சங்கங்கள் பற்றிய வரலாற்று தகவல்களை தொகுத்து தரும் நுால். அச்சுத் தொழிலின் துவக்க நிலையும் அது உலகில் பரவிய விதம், அந்த தொழில் அடைந்த வளர்ச்சியால் ஏற்பட்ட மாற்றங்களை தெரிவிக்கிறது. தொடர்ந்து, பத்திரிகையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சங்கம் உருவானது பற்றி உரைக்கிறது. அகில இந்திய அளவில் அமைந்த கூட்டமைப்புகள், சங்கங்களிடையே ஏற்பட்ட பிளவு, அதனால் ஏற்பட்ட புதிய அமைப்புகள் பற்றிய விபரங்கள் உள்ளன.தமிழகத்தில் உருவான சங்கங்கள், அவற்றின் செயல்பாடு குறித்த விபரங்களும் தரப்பட்டுள்ளன. பத்திரிகையாளர் நலம் காக்கும் சங்கங்கள் பற்றிய நுால்.– மதி