/ சுய முன்னேற்றம் / வார்த்தைகளில் இருக்கிறது வாழ்க்கை!

₹ 100

உணர்ச்சிகள் மீறும் போது, சொற்களை முறையாக பயன்படுத்த வழிகாட்டும் கருத்துக்கள் அடங்கிய தொகுப்பு நுால். உளவியல் மற்றும் அனுபவ அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. அன்றாடம் பேசும் சொற்களே உறவுகளையும், நிம்மதியையும், வெற்றியையும் தேடித் தருகிறது என்பதை தெளிவாக மனதில் பதிய வைக்கிறது. இதற்கு சிந்தனையை மேம்படுத்தும் வழிமுறைகளை உதாரணங்களுடன் எடுத்துக்காட்டுகிறது. வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளை எளிய நடையில் எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு கருத்தும் தெளிவாக பதியும்படி அலசி முன்வைக்கப்பட்டுள்ளது. சுதந்திரம், அச்சமின்மை மற்றும் நேர்மையாக வாழ அறிவுரைக்கிறது. உயர்வுக்கு வழிகாட்டும் நுால். – ராம்


சமீபத்திய செய்தி