/ பயண கட்டுரை / வருடம் முழுவதும் வசந்தம்

₹ 100

ரஷ்ய நாட்டில் பயணம் செய்த அனுபவங்களின் தொகுப்பு மறுபதிப்பாக மலர்ந்துள்ளது. ரஷ்ய பள்ளி ஒன்றில் விடுமுறையில் கூட மாணவர்கள் படிக்கும் அற்புதத்தை காட்டுகிறது. கல்வி இயல்பானதாக இருக்க வேண்டும், இறுக்கமானதாக இருக்கக்கூடாது என்பதை வெளிப்படுத்துகிறது. ரஷ்ய நாட்டில் கல்வியாளர்கள் இயல்பாக, இயற்கையாக பல்வேறு விஷயங்களை தெரிந்து வைத்திருப்பதாக உதாரணங்கள் வழியாக எடுத்துரைக்கிறது. அறிவு பயணத்தில் கிடைத்த அனுபவ செய்திகளை உரைக்கிறது. காரல் மார்க்ஸ் பெயரில் அமைந்துள்ள நுாலகத்தில் திருக்குறள் மொழிபெயர்ப்பு வைத்திருப் பதை குறிப்பிடுகிறது. எந்தப் பக்கத்தை புரட்டினாலும் அரிய தகவல்களுடன் அமைந்துள்ள நுால். – முகிலை ராசபாண்டியன்