/ வாழ்க்கை வரலாறு / வ.உ.சி.150 பிறந்த ஆண்டு சிறப்பு மலர்
வ.உ.சி.150 பிறந்த ஆண்டு சிறப்பு மலர்
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி., நினைவை சிறப்பிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள நுால். அரசின் செயல்பாட்டை மக்களுக்கு விளக்கும் வண்ணம் உள்ளது. கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.,யின் நினைவை போற்றும் விதமாக அவரது வாழ்க்கை வரலாற்று குறிப்புகள் முதல் கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. நிகழ்வுகளை நினைவுபடுத்தும் அரிய புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.வ.உ.சிதம்பரம் எழுதிய, நான் யார் என்ற கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. சுதந்திர போரில் அவருக்கு இருந்த தீவிர ஈடுபாட்டை இது வெளிப்படுத்துகிறது. அவரது செயல்பாட்டை விளக்கும் அரிய ஆவணங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ளது இந்த நுால்.– மதி