/ தமிழ்மொழி / வாழ நினைத்தால் வாழலாம்
வாழ நினைத்தால் வாழலாம்
தமிழின் முதன்மை அற நுாலான திருக்குறளை மனப்பாடப் பகுதியாகவே கற்றுள்ள தலைமுறைக்கு, அது வாழ்வியல் பாடம்; தன்னம்பிக்கை அள்ளித் தரும் சுரங்கம் என்பதை அற்புதமாக விவரிக்கிறது இந்த நுால். வாழ்வதற்கு முதன்மை இலக்கு அமைப்பது முதல், மனக் கவலையை மாற்றுவதற்கு உரிய வழிமுறைகள் வரை, 22 கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் ஒரு முத்தான கருத்தை, கடைப்பிடிக்க வேண்டிய அறத்தை வாசகருக்கு போதிக்கிறது. ஒரு கதை, நிஜத்தில் நடந்த சம்பவம், சாதனையாளர்கள், தத்துவம், வரலாறு இப்படி பயணித்து, திருக்குறளுடன் இணைத்து, வாழ்வின் மகத்துவத்தை அழகாக விளக்குகிறது. மாணவர்கள் படிக்க வேண்டிய நுால்.– சி.கலாதம்பி