/ கட்டுரைகள் / வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
சவால்களை எதிர்கொள்வதில் உள்ள உளவியல் அணுகுமுறைகளை முன்வைக்கும் நுால். பாரதியாரின் வாழ்க்கையை உத்வேகமாக கூறுகிறது. வாழ்க்கையில் ஏற்படும் இன்பங்களை யாரும் எண்ணுவதில்லை. பாராட்டுதல் குறித்த விபரங்களையே மனம் அளவிடுகிறது. செல்வம் குவிவதற்கும், உண்மையான மனநிறைவுக்கும் இடையே உள்ள கூர்மையான வேறுபாட்டை வரையறுக்கிறது. இதற்கு பாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டுகிறது. பாதகமான சூழ்நிலையிலும் எண்ணற்ற இன்பங்களை உணர்ந்து மகிழ்ந்திருந்ததை உவமையாக அமைக்கிறது. ஒவ்வொரு சூழ்நிலையையும் நன்றி, நேர்மறையுடனும் அணுக கற்பிக்கிறது. வெறும் வார்த்தைகளின் தொகுப்பாக இல்லாமல் நயத்துடன் வாழ்வதற்கு வழிகாட்டுகிறது.– வி.விஷ்வா