/ கவிதைகள் / வாழ்க்கை வசந்தத்தைத் தேடி

₹ 80

நாட்டில் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். மரபணு மாற்றம் செய்த விதைகள் வரவை நினைத்து கவலை அடைகிறது. காட்டுமிராண்டித் தனத்தின் காலமாற்று பெயர் தீவிரவாதம் என்கிறது. இலவசங்கள், ஏழையின் வறுமை கோட்டை நீக்க உதவ வேண்டுமே தவிர, ஓட்டு வங்கியாக மாறக்கூடாது என்கிறது.பணம், நீதிகளை கூட நிலைதடுமாற வைக்கும் என உரக்கக் கூறுகிறது. நதிகள் இந்தியா முழுவதும் பாய வேண்டும் என்கிறது. ஆடம்பரங்கள், ஒழுக்கத்தைக் கெடுத்து, அரசாங்கத்தை அழித்து விடும் என சொல்கிறது. குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தும் முதலாளிகளின் இடுப்பு எலும்பை ஒடித்து போட ஆவேசப்படுகிறது. கவுரவ கொலை செய்யும் உயிர் கொல்லிகளை சாடுகிறது. கோடிகளை குவிக்கும் கல்விக்கூடங்களை தோலுரிக்கிறது. இப்படி ஒவ்வொரு கவிதையும் சமூக பார்வையுடன் படைக்கப்பட்டுள்ளது.– ராகவ்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை