/ புத்தக மதிப்புரை / வாழ்க்கை என்ற வட்டத்திற்குள்...

₹ 220

ஆங்கில நாவலின் தமிழாக்க நுால். போதைக்கு அடிமையான தொழிலாளி மைக்கேல். அவரது மனைவி சூசன், மகளை பாரமாக நினைத்து விற்பனை செய்து பிரிகிறார். தனிமையில் வாடி வேதனையில், ‘குடிக்க மாட்டேன்’ என சபதம் எடுக்கிறார் மைக்கேல். பின், சலியாத உழைப்பால் உயர்நிலைக்கு வந்து, மேயர் என்ற புகழோடு வாழ்கிறார். தேடி வந்த மனைவியை அரைமனதுடன் ஏற்கும் மைக்கேல், மீண்டும் மதுவுக்கு அடிமையாகிறார். வாழ்க்கை என்னவாக மாறுகிறது, மைக்கேலின் இறுதி கால வாழ்க்கை எப்படியிருந்தது போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறது. வாழ்க்கையில் துன்பம் துரத்திக் கொண்டே தான் இருக்கும்; அதை எப்படி சாதுர்யமாக கையாண்டு வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் நுால். – டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை