/ பொது / வாழ்வின் சில உன்னதங்கள்

₹ 200

10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 220) கம்பராமாயணத்திற்கு ஒரு ரசிகமணி என்றால், பழைய புத்தக ரசனைக்கு, இதோ ஒரு ரசிகமணி என்று கை காட்டுமளவிற்கு நம்மைக் கவர்கிறார் நூலாசிரியர். மணிக்கணக்கில் பழைய புத்தகக் கடைகளில், புத்தகக் குவியல்கள். நோண்டிப் புரட்டுவதும், படித்துப் பார்ப்பதும், சமயங்களில் பல ஆண்டுகளாய்த் தேடிய புத்தகம் ஆங்கு கிடைப்பதையும், அதைப் பேரம் பேசி வாங்குவதும்... இவையெல்லாம் தான் வாழ்வின் உன்னதமான தருணங்கள்! நூலாசிரியர் பல பழைய புத்தகக் கடை வியாபாரிகளான முதலியார், நாயக்கர், ராவுத்தர், சங்கமேஸ்வர ஐயர், ஊமையன், எத்திராஜூ, முருகேசன், ஆழ்வார் முதலியோரிடம், பல சந்தர்ப்பங்களில் தான் வாங்கிய அரிய புத்தகங்கள், வெளிநாட்டுப் பத்திரிகைகள் பற்றிய விவரங்களை, மகா பரவசத்துடன் விவாதித்திருக்கிறார். இந்தப் பழைய புத்தக வியாபாரிகள் விற்பவைக்குக் கடைபிடிக்கும் டெக்னிக்குகளையும், அவர்களிடம் பேரம் பேசி வாங்குவதில் பின்பற்ற வேண்டிய நெளிவு, சுளிவுகளையும், மிகச்சுவையாக விளக்குகிறார்! புத்தகக் காதலர்கள் அவசியம் புதிதாகவே வாங்கிப் படிக்க வேண்டிய சுவாரஸ்யமான நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை