/ அரசியல் / வாழ்ந்து காட்டியவர்கள்
வாழ்ந்து காட்டியவர்கள்
உழைப்பால் சாதனைகள் புரிந்து புகழ் பெற்றவர்களின் வாழ்க்கையை சுருக்கமாக தரும் நுால். தன்னம்பிக்கையை உயர்த்தும் வகையில் உள்ளது.உலக நாடுகளில் பிறந்த பலர், பல்வேறு காலங்களில் பல துறைகளில் சாதனை புரிந்துள்ளனர். அந்த சாதனையின் பின்னணியை தெரிவிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. புகழ் பெற்ற 50 பேரின் செயல்பாடு குறித்து சுருக்கமாக தரப்பட்டுள்ளது. காந்திஜியின் சாதனையில் துவங்கி, பொதுவுடைமை சிற்பி கார்ல் மார்க்ஸ், ஜவஹர்லால் நேரு, சுவாமி விவேகானந்தர் என பட்டியல் நீண்டுள்ளது. ஒவ்வொரு துறையிலும் உழைப்பால் தனித்திறனை காட்டி உயர்ந்தது பற்றி கூறுகிறது. உலக அளவில் தலைவர்களின் சாதனை குறித்து எளிய நடையில் உருவாக்கப்பட்டுள்ள நுால்.– மதி