/ கட்டுரைகள் / வாழ்வில் மறக்கவியலா சந்திப்புகள்
வாழ்வில் மறக்கவியலா சந்திப்புகள்
மகிழ்வான வாழ்வை விட எதுவும் முதன்மையானதில்லை என எடுத்துரைக்கும் நுால்.ஆசிரியர் பாடம் கற்பித்ததை மாணவி எடுத்த சொல்ல, ‘அடியாத மாடு படியாது’ என்ற கருத்தை உணர்த்துகிறது. பள்ளிப் பாடத்துடன் வாழ்க்கையில் முன்னேற பாடமும் தேவை என்பதை தெளிவுபடுத்துகிறது. வாழ்க்கையில் ஒரு லட்சியத்தை எடுத்துக்கொண்டு அதை நோக்கி நடை போட வேண்டும். அதை அடைய முடியவில்லை என்றாலும் மற்றொன்றை அடைய வழி ஏற்படும் என நம்பிக்கையூட்டுகிறது. புகழ்பெற்ற அறிஞர்கள் பெயரில் அமைந்திருக்கும் கட்டுரைகள் அனுபவத்தை வழங்கும் வகையில் உள்ளன. புத்தகத்தில் அமைந்துள்ள கட்டுரைகள் பல கோணத்தில் வாழ்வை அறிமுகம் செய்கின்றன.– முகிலை ராசபாண்டியன்