/ கட்டுரைகள் / வாழ்வின் ஒரு சுவை

₹ 300

உடல் நரம்புகளில் ஏற்படும் மாற்றமே, ஞானநிலை என விளக்கம் அளித்த யூஜி கிருஷ்ணமூர்த்தி வாழ்வின் இறுதி நிமிடங்களை தொகுத்துள்ள நுால். இறுதி காலத்தில் யூஜியுடன் வசித்த சினிமா தயாரிப்பாளர் மகேஷ் பட்டால் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு வரும் தனக்குள் இருக்கும் உண்மைகளை, அவர்களே முயன்று கண்டுபிடித்து உணர வேண்டும் என யூஜி தத்துவ விளக்கம் அளித்துள்ளதை அறிய தருகிறது. ஐரோப்பிய நாடான இத்தாலி வேலிகுரோசிவியாவில், 2007ல் மறைந்தார் யூஜி. அப்போது உடன் இருந்த சினிமா தயாரிப்பாளர் மகேஷ் பட், இறுதி நிமிடங்களில் நடந்த சம்பவங்களை அனுபவப்பூர்வமாக நேர்முகம் போல் பதிவு செய்துள்ளார். மரணம் தறுவாயில் யூஜியின் செயல்பாடுகளை தெளிவாக எடுத்துரைக்கும் புத்தகம். – மதி


சமீபத்திய செய்தி