/ வாழ்க்கை வரலாறு / வாழ்விற்கு வழிகாட்டும் வள்ளலாரின் வரலாறு
வாழ்விற்கு வழிகாட்டும் வள்ளலாரின் வரலாறு
அருட்பிரகாச வள்ளலாரின் வரலாறு, சேவை, சீர்திருத்தங்கள் பற்றிய நுால். உலக அமைதிக்கும், ஒற்றுமைக்கும் வழிகாட்டுவதை எடுத்து கூறுகிறது. வள்ளலார் தோற்றம், ஜாதி, மத மறுப்பு, கடவுள் கொள்கை, தமிழ்த்தொண்டு என, 15 தலைப்புகளில் உள்ளது. தந்தையை இழந்து, பொன்னேரியில் பாட்டி வீட்டில் தங்கியது, தாயை இழந்து அண்ணி அன்பில் வளர்ந்த தகவல்கள் உள்ளன. கல்வி கற்ற அறையில் கண்ணாடியில் கந்தன் காட்சி தந்ததை குறிப்பிடுகிறது. ஒளி வழிபாடு, முதல் சொற்பொழிவு மற்றும் சேவையை துவங்கியது பற்றிய செய்திகள் உள்ளன. வள்ளலாரின் அருள்வாழ்வு காட்டும் வழியை கூறும் நுால். – முனைவர் மா.கி.ரமணன்