/ கட்டுரைகள் / வாழ்வியல் நெறிகள்

₹ 150

வாழ்வு மேம்பட சமூகம், அறநெறி, ஆன்மிக மதிப்பீடுகள், பழகியல் போன்ற தலைப்புகளில் தகவல்களை தந்துள்ள நுால். வேதனையை சாதனையாக மாற்றுவதில் மனவலிமை உதவிகரமாக இருக்கும் என்பது நிகழ்வுகள் வழியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. விரக்தி, ஏமாற்றம், கோபம் மனதை ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது என்பதை தெளிவாக்குகிறது. மோட்சம் அளிக்கும் கடவுள் அளவுகோல் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. வலிமையான வார்த்தைகள் வளமான எண்ணத்தை உருவாக்கும்; மன்னிப்பு உறவை மேம்படுத்தும் என உரைக்கிறது. ஆன்மிக மதிப்பீடுகள் நிரல்படுத்தப்பட்டுள்ளன. திருடிய மாணவனை நல்வழிப்படுத்திய ஆசிரியரின் நற்பண்பு போன்ற மதிப்பீடுகளும் இடம் பெற்று உள்ளன. வாழ்வு மேன்மையடைய உதவும் நுால்.– புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை