/ ஆன்மிகம் / வேதங்களில் உடற்கூறியல்
வேதங்களில் உடற்கூறியல்
வேதங்களில் உடற்கூறுகள் தொடர்பான தகவல்கள் இருப்பதாக எடுத்துரைக்கும் நுால். வேதம், புராணம், இதிகாசங்கள் உடலியல் சார்ந்த கருத்துகளை உள்ளடக்கியவையாக கூறுகிறது. புராணங்கள் அடிப்படையில் கருத்துகளை இணைத்து வேத நாகரிகம் என்ற கருத்தை வரையறுக்கிறது. நான்கு வேதங்கள், அவை சார்ந்த புராணக்கதைகள், ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் மருத்துவ அடிப்படை உள்ளதாக முன்வைக்கிறது.வேதங்களில் உடல் சார்ந்த கருத்து இருப்பதாகக் கூறுகிறது. மரபணுக்கள் பற்றியும் கூறுகிறது. உடல் உறுப்பு தன்மைகளைப் பண்டைய மருத்துவத்தோடு தொடர்புபடுத்திக் காட்ட முயல்கிறது. இதற்கு தக்க சான்றுகள் தரவில்லை. -– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு