/ வாழ்க்கை வரலாறு / வீணையை மீட்டும் விரல்
வீணையை மீட்டும் விரல்
மகாகவி பாரதியாரின் வாழ்க்கையில் அறியாத செய்திகளை கூறும் நுால். முரண்பட்ட தகவல்களை அறியத் தருகிறது. பாரதியார் என்ற வீணையை மீட்டியது செல்லம்மா என்பதால் அதுவே தலைப்பாக உள்ளது. சுப்பையா என்ற பாரதி, தந்தையுடன் முரண்பட்டது குறித்த தகவல்கள் உள்ளன. செல்லம்மாவின் 7ம் வயதில், 15 வயது நிறைந்த பாரதிக்கு திருமணம் முடித்தது கூறப்பட்டுள்ளது.எட்டயபுரம் மன்னர் கொண்டிருந்த அன்பும், அத்தையுடன் தங்கி காசியில் பாரதி கல்வி பயின்றது உள்ளிட்ட அரிய செய்திகளும் உள்ளன. தேசியவாதியாக சென்னை மெரினாவில் கூட்டங்கள் கூட்டியதும், ஆங்கிலேயரிடமிருந்து தப்பியதும் தெரிவிக்கப்பட்டுள்ள நுால். – முனைவர் கலியன் சம்பத்து