/ வாழ்க்கை வரலாறு / வீரமங்கை வேலு நாச்சியார்
வீரமங்கை வேலு நாச்சியார்
ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் வரலாற்றை தெளிவாக எடுத்துரைக்கும் நுால். ஆண்கள், பல பெண்களைத் திருமணம் செய்து கொள் வது அந்தக்காலத்தில் நடைமுறையில் இருந்ததை மன்னர் குடும்ப வரலாற்று சம்பவங்களில் இருந்து எடுத்துக் கூறுகிறது. காளையார்கோவிலில் நடைபெற்ற போரின் விளைவாக ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து கூறப்பட்டுள்ளன. அதன் வழியாக கொல்லங்குடியில் இருந்த வேலு நாச்சியார் எழுச்சி பெற்றதை எடுத்துக்கூறுகிறது. வேலு நாச்சியார் உருவாக்கிய படையின் சாகச செயல்களை அறியத்தருகிறது. சிவகங்கையை மீட்ட செய்தியும் உள்ளது. வேலு நாச்சியாரின் வரலாற்றை கண்முன் நடைபெறுவதுபோல் கூறுகிறது. ராமநாதபுரம், சிவகங்கை வரலாற்றை விரிவாக எடுத்துரைக்கும் ஆவணமாக உள்ள நுால். – முகிலை ராசபாண்டியன்




