/ ஆன்மிகம் / வேல் மாறல் மகா மந்திரம் எளிய உரையுடன்
வேல் மாறல் மகா மந்திரம் எளிய உரையுடன்
வேல் மாறல் பாடல்களை விளக்கமாக படிக்கும் முறைகள் பற்றி கூறும் நுால். திருத்தணியில் உதித்த குகனின் வேல் வகுப்பு 16 பாடல் கண்ணிகளை உடையது. வள்ளி மலை சச்சிதானந்த சுவாமிகள் அதை நான்கு மடங்காக்கி வேல் மாறல் என பெயர் சூட்டிய வரலாற்றை குறிப்பிடுகிறது. இதை பாராயணம் செய்தால், மனம், உடல், உயிர் நோய்க்கு மருந்து என உபதேசிக்கிறது. வேல் வகுப்பு பாடல் விளக்கத்தில், திருப்புகழ் பாடி துதிப்போருக்கு துயர் கொடுக்கும் பகைவரை அழித்து, துணையாக இறைவன் நிற்பார் என்கிறது. திருமுருகாற்றுப்படை பாடியதால் நக்கீரர் முருகனால் விடுவிக்கப்பட்டதை கூறுகிறது. வேல் மாறல் மகா மந்திர மகிமை கூறும் நுால். – முனைவர் மா.கி.ரமணன்




