/ கட்டுரைகள் / வெளிச்சத்திற்கு வாருங்கள்

₹ 200

மூடப் பழக்கத்தை ஒழிக்க வழிகாட்டும் நுால். பகுத்தறிவு சிந்தனைகள் பரவிக் கிடக்கின்றன. தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த அண்ணா துரையின் உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்பட்டது குறித்த விபரங்களை தருகிறது. விடுதலைப் போராட்டத்தின் போது தலைமறைவாக வாழ்ந்த காமராஜர், பசியோடு உண்ண முயன்ற உணவில் மண் அள்ளிப் போட்டு கொடுமை செய்த காவலர் குறித்து கூறப்பட்டுள்ளது. புரட்சி கவிஞர் பாரதிதாசன், புதுமைக் கவிஞர் வாணிதாசன் புகழ் பேசப்பட்டுள்ளது. கிரேக்க மேதைகள் பற்றிய தகவல்களும் உள்ளன. பண்டைய கிரேக்கம், ரோமில் பெண் அடிமைத்தனம் இருந்ததை எடுத்துரைக்கிறது. கண்மூடி வழக்கங்கள் பரவிக் கிடப்பதை கூறி, பகுத்தறிய கற்பிக்கும் நுால். – டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை