/ வாழ்க்கை வரலாறு / வெளிநாட்டு பிரபலங்களும் வெளிவராத சம்பவங்களும்!
வெளிநாட்டு பிரபலங்களும் வெளிவராத சம்பவங்களும்!
அறிந்த அறியாத 50 பிரபலங்களின் வாழ்க்கை குறிப்புகள் இடம் பெற்றுள்ள நுால். ஒவ்வொருவரின் வாழ்க்கையை, ரத்தின சுருக்கமாக கொடுத்திருக்கும் விதம் அற்புதம். கேப்டன் குக், 17ம் நுாற்றாண்டில் ஆஸ்திரேலியா ஹவாய் தீவுகளை கண்டறிந்தார். ஆசைப்பட்டபடி படப்பிடிப்பின் போது உயிர் இழந்தவர் ஹாலிவுட் நடிகர் ரெட்ராக்ஸ். இது போல் ஜொலிக்க, ஒரு விஷயத்தை அடிக்கடி கற்பனை செய்து கொண்டு இருந்தால் நடந்து விடும் என்று குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள நுால். மாணவர்களுக்கு உதவும் கையேடாக உள்ள நுால்.– சீத்தலைச் சாத்தன்