/ வரலாறு / வெள்ளையர்களை வீழ்த்திய வீரத்தமிழர்கள்
வெள்ளையர்களை வீழ்த்திய வீரத்தமிழர்கள்
விடுதலைப்போரில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய ஏழு பேரின் வீர வரலாற்று நுால். இந்திய விடுதலைப்போர் தமிழகத்தில் தான் துவங்கியது. எதிர்த்து குரல் கொடுத்த பூலித்தேவன், மருதநாயகம், அழகு முத்துக்கோன், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, கட்டபொம்மன் வரலாற்றை விளக்குகிறது. வீரச்செயல்கள், போர்த்தந்திரம் விளக்கமாக அமைந்துள்ளன. விடுதலைக்கு வித்திட்டோரை மதிக்கும் உணர்வை விதைக்கிறது. விறுவிறுப்பாக சொல்லப்பட்டுள்ள நுால். – ராம.குருநாதன்