/ கவிதைகள் / வெப்பம் பூக்கும் பெருநிலம்

₹ 70

அனல் பறக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். ‘குரங்கின் பரிணாம வளர்ச்சி மனிதன் அன்றோ... விலங்குகளில் இருந்து மனிதன் என்றால், மனிதனிடமிருந்து விலங்குகள் எப்படி விருத்தி ஆயிற்று’ என, பதில் சொல்ல முடியாத கேள்விகள் கேட்கிறது.ஆத்திரம் பொங்க சிறுவன் பாடுகிறான். காரணம் தந்தை பெயர் தெரியாதவன். ‘அந்தப் பூக்காரி மாலையில் மட்டும் தவறாமல் வருகிறாள்... நீ அந்தி மயங்கிய வேளையில் அலங்கரித்து கொள்கிறாய்... இங்கே வந்தவர்களில் எவரும் நிரந்தரமாய் தங்கியது இல்லையே’ என்ற குமுறலில் நியாயமிருக்கிறது. அனுபவித்து சிந்தித்து படிக்க வேண்டிய பாடல்களின் திரட்டு.– சீத்தலைச் சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை