/ சுய முன்னேற்றம் / வெற்றி உங்கள் பக்கம்

₹ 160

எண்ணங்களை செம்மைப்படுத்துவதில் தான் வாழ்க்கை பயணத்தை இனிமையாக்க முடியும் என்று கூறும் நுால். வீழாமல் இருப்பதல்ல வெற்றி; வீழும் போதெல்லாம் எழுவது தான் வெற்றி. முயற்சி செய்பவன் சாதனை படைக்கிறான்; தொடர்ந்து முயற்சிப்பவன் சரித்திரம் படைக்கிறான். தோல்விகளையும், சோதனைகளையும் எதிர்கொள்ளும் துணிவை தோழனாக்கிக் கொள்ள வேண்டும் என்கிறது. செயல்களை செம்மையாக்கி திறன்களை கூர்மை யாக்கி, இலக்கு நோக்கி பயணிக்க வேண்டும். முயற்சியே மூச்சுக்காற்று என்ற முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டே இருக்க அறிவுரைக்கிறது. சவால்களை வென்று நம்பிக்கையோடு முயற்சி செய்தால், ஆற்றல் மிக்க வெற்றிகளை குவிக்கலாம் என்கிறது. தன்னம்பிக்கை ஊட்டும் பொன்மொழிகள் உடைய நுால். – புலவர் சு.மதியழகன்


முக்கிய வீடியோ