/ கட்டுரைகள் / வெற்றிக்கொடி கட்டு
வெற்றிக்கொடி கட்டு
பக்கம்: 120 பள்ளி, கல்லூரியில் படிக்கும் காலத்தில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு, இலக்கு, லட்சியம் என்று இருந்திருக்கும். கல்லூரியை விட்டு வெளியே வந்து நிதர்சனத்தை எதிர்கொள்ளும்போது,பலருக்கு அவர்களது கனவுகளும் இலக்குகளும் எங்கோ விலகிச் சென்றிருக்கும்! இது யதார்த்தம். அப்படிப்பட்டவர்களை வழி நடத்திச் செல்லும் நிலையில் உள்ள பெற்றோருக்கும், மூத்தோருக்கும் உதவும் வகையில், இந்த நூலை எழுதியிருக்கிறார் ஆசிரியர். கால் நூற்றாண்டுக்கும் மேலாகப் பல்வேறு மாணவர்களுடன் பழகியதில், தனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் தாக்கத்தில், உருவாக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களில் நகைச்சுவையாக எழுதியிருந்த போதிலும், சீரியசாகச் சிந்திக்கவும் வைத்திருக்கிறார் ஆசிரியர்.