/ விளையாட்டு / வெற்றியின் வேகம்
வெற்றியின் வேகம்
வறிய குடும்பத்தில் பிறந்த ஓட்டப்பந்தய வீரன் பற்றிய நுால். வறுமையால் வெறும் காலுடன் ஓடும் பாலுவுக்கு, ஊக்கம் அளித்து பயிற்சி கொடுக்கிறார் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர். அதன் வாயிலாக மாவட்ட மற்றும் மாநில அளவில் நடக்கும் எல்லா போட்டிகளிலும் பங்கேற்று பரிசை வென்று, பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்ப்பது பற்றி சொல்லப்பட்டுள்ளது. ஓட்டப்பந்தயத்தில் சாதனையாளராக இருக்கும் பாலுவிடம் பெரும் கனவு குடி கொண்டிருந்தது. ஒலிம்பிக்கில் உச்சம் தொட்டு தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே அது. அதுவே ஓட்டப்பந்தய வீரனை வெளிஉலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் நுால். – புலவர் சு.மதியழகன்




