/ வர்த்தகம் / வீட்டிலுள்ள பெண்களுக்கு ஏற்ற தொழில்கள்
வீட்டிலுள்ள பெண்களுக்கு ஏற்ற தொழில்கள்
பெண்கள் குறைந்த செலவில் செய்ய ஏற்ற தொழில்களை பற்றிய நுால். இதில், 50 தலைப்புகளில் வழி காட்டப்பட்டு உள்ளது. வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே செய்யும் வகையில் தொழில்கள் உள்ளன. ஓய்வு நேரத்தில் கைத்தொழில்களை முயற்சித்து, நல்ல வருமானம் ஈட்டலாம் என வழி காட்டுகிறது. குங்குமம் தயாரிப்பு, கடலை மிட்டாய், மெழுகுவர்த்தி, ஊறுகாய் தயாரிக்க வழிமுறைகள் உள்ளன. மாற்றுத்திறனாளிகள் என்னென்ன கைத்தொழில்களை செய்து வருமானம் பார்க்கலாம் என்பது பற்றியும் தகவல்கள் உள்ளன. தேவையான பொருட்கள், செய்யும் முறைகள், தயாரித்த பொருட்களை சந்தைப்படுத்துவது பற்றியும் கூறப்பட்டுள்ளது. பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கும் நுால். – முகில்குமரன்




