/ கதைகள் / வெட்டுக்காசு

₹ 180

உ ண்மை சம்பவங்களை மையமாக வைத்து புனையப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் ஏழு கதைகள் உள்ளன. மனிதர்களின் வஞ்சகம் குறித்து புனையப்பட்டுள்ளது. காதல் திருமணம் செய்தோர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை, ‘போராட்டம்’ கதை பகிர்கிறது. சாதாரண தகராறு, சாதி சண்டையாக மாறி, தீண்டாமை கொடுமையாக எதிரொலிக்கும், ‘சாட்டை’ கதை, சமூக ஏற்றத்தாழ்வுகளை அலசுகிறது. மூன்று வயது சிறுவன் செயல், பெரிய மனிதர் பார்வையில் எப்படியெல்லாம் இருக்கும் என்பதை, ‘குற்றவாளிகள்’ கதை பகிர்கிறது. சமூக அவலங்களை கேள்விகளாக வைக்கிறது, ‘தற்கொலை குறிப்பு’ கதை. கிராம இயற்கை அழகு, கலை வடிவ வீடுகளை கண்முன் கொண்டு நிறுத்துகிறது. கிராமத்து நம்பிக்கையையும் அலசும் நுால். – டி.எஸ்.ராயன்


முக்கிய வீடியோ