/ வாழ்க்கை வரலாறு / விடுதலைப் போரைத் தொடங்கி வைத்த வீர மருது பாண்டியர்
விடுதலைப் போரைத் தொடங்கி வைத்த வீர மருது பாண்டியர்
மருது பாண்டியர்களின் வரலாறு குறித்து விவரிக்கும் நுால். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் விடுதலைப் போரை துவக்கி வைத்தது குறித்து உள்ளது.மருது பாண்டியர் பெயர் காரணம், காளையார் கோவில் போரில் ஹைதர் அலி படையுடன் ஆங்கிலேயரை வென்றது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. வேலு நாச்சியாரை அரியணையில் ஏற்றியதில் பங்கு, ஆட்சியில் நடந்த கோவில் திருப்பணிகள் குறித்த விபரங்களும் உள்ளன. வீர சங்கம் நிறுவப்பட்ட வரலாறு, ஸ்ரீரங்கத்தில் நடந்த ஜம்பூ தீவு பிரகடனம் உள்ளிட்ட அரிய தகவல்களை தருகிறது. விடுதலைப் போரில் சிவகங்கைச் சீமை பங்களிப்பை தமிழர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பெரிதும் உதவும் வகையில் உள்ள நுால்.– சிவசு